Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்லை கடவுளாக மாற்ற தெரிந்தவனுக்கு… கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விமர்சனத்துக்கு அன்பில் மகேஷ் விளக்கம்

Anbil Mahesh : மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் முழக்கம் ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கத்தின் தொடக்க விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் வடித்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கல்லை கடவுளாக மாற்ற தெரிந்தவனுக்கு… கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் –  விமர்சனத்துக்கு அன்பில் மகேஷ் விளக்கம்
அன்பில் மகேஷ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Oct 2025 15:00 PM IST

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கரூரில் கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்த சம்பவம் கேட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் சிந்தினார். இந்த நிலையில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தது எப்படி என உள்ளிட்ட கேள்விகளை எதிர்கட்சிகள் எழுப்பினர். மேலும் அவர் கண்ணீர் வடித்தது நடிப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், கல்லை கடவுளாக மாற்றிய மனிதன், மனிதனாக மாற மறந்துவிட்டான் என குறிப்பிட்டுள்ளார். அவர் பேசியது குறித்த விளக்கமாக பார்க்கலாம்.

விமர்சனத்துக்கு அன்பில் மகேஷ் விளக்கம்

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது உடனடியாக மருத்துவமனை வந்த அன்பில் மகேஷ், இறந்தவர்களின் உடலைப் பார்த்து கண்ணீர் வடித்தார். இந்த வீடியோ காண்போரை நெகிழச் செய்தது. இந்த நிலையில் எதிர்கட்சியினரும் தவெகவினரும் இதனை நடிப்பு எனவும் டிராமா எனவும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் முழக்கம் என்ற ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க : பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..

அப்போது அவர் மீதான விமர்சனம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த அவர், ”பேச்சு என்பது உணர்ச்சியும் அறிவும் இணைந்து அமைந்திட வேண்டும். உணர்ச்சிகள் அதிகமாகவும் அறிவுகள் குறைவாக இருந்தால் அது விலங்குக்கு சமமானது. உணர்ச்சிகள் குறைவாகவும், அறிவு அதிகமாகவும் இருந்தால் அது மரத்துக்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு மனிதனாக மாற மறந்து விட்டான்” என்றார்.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய தவெக

ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பயிலரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் முழக்கம் ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கத்தின் தொடக்க விழா அக்டோபர் 22, 2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகி சிவம், உலக தமிழ் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா மற்றும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.