Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்டுள்ளது.. வேதனையில் துடிக்கிறேன் – மல்லை சத்யா

Mallai Sathya Statement: தன் மீது வீனாக துரோக பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்சாட்டு உண்மையானால் நான் இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், துரை வைகோவின் அரசியல் வாழ்க்கைக்காக என் மீது அப்பட்டமாக பழி சுமத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்டுள்ளது.. வேதனையில் துடிக்கிறேன் – மல்லை சத்யா
மல்லை சத்யா
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jul 2025 12:43 PM

சென்னை, ஜூலை 14, 2025:  தலைவர் வைகோ தன் மகன் துரையின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் உழைத்த என் மீது துரோக பழி போட்டுள்ளார் வைகோ என மல்லை சத்யா தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதிமுக கட்சியின் உட்கட்சி விவகாரம் வெடித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்க்ட்சியின் மல்லை சத்யா மீது பழி சுமத்தியுள்ளார். அதாவது, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார் என கூறினார். மேலும், பல காலம் மல்லை சத்யா எனக்கு துணையாக இருந்தார் எனவும் சமீபத்தில் அப்படி இல்லை எனவும் வைகோ கூறினார். அதோடு, மல்லை சத்யா கட்சியில் இருந்து வெளியேறியவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பது வருத்தம் தருகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாட்களாக மதிமுகவில் பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், மௌனம் களைக்கும் வகையில் மல்லை சத்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன் ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. வைகோ அவர்கள் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..

அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்டுள்ளது:

வைகோவிற்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால் இறந்து போயிருப்பேன். தன் மகன் துரையின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளா வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி, தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்ட கடந்த 09 07 25 தொடங்கி 13 07 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை.

என் தூக்கத்தை தொலைத்து விட்டேன் என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு வைகோ அவர்கள் வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலேமே. அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே. அன்புத் தலைவர் வைகோ அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான்.

மேலும் படிக்க: நாளை தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

யாருக்காகவும் விட்டுக்கொடுத்தது இல்லை:

மதிமுகவில் 31 ஆண்டுகால என்னுடைய பயணத்தில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வழங்கி அழகு பார்த்த தங்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றி வந்துள்ளேன் யாருக்காகவும் எதற்காகவும் உங்களை நான் விட்டுக் கொடுத்தவன் அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். காலம் முழுவதும் தங்களுக்கும் மதிமுக விற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்னுடைய அரசியல் முகவரி நீங்கள்தான்.