வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா? அவ்ளோ தான் போச்சு… விவரம் உள்ளே!
Tamil Nadu Voter List: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருக்கும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு இன்று வியாழக்கிழமை ( மார்ச் 26) கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள், இரு இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள், வேறு முகவரிக்கு மாறுதலாகி சென்றவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி, தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், தவறுதலாக வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கி இருந்தது. மேலும், தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் இன்று வியாழக்கிழமையுடன் ( மார்ச் 26) முடிவடைகிறது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியான நாளில் இருந்து தற்போது வரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க: பூத் நிலை அலுவலர்கள் என்றால் யார்?.. அவர்களின் பணிகள் என்ன என்ன?
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள்
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத தகுதி வாய்ந்த வாக்காளர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்துமாறு தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 23- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் பட்டியலை திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த நவம்பர் 4- ஆம் தேதி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள்
இதைத் தொடர்ந்து, சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 018 பேர் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தமிழக முழுவதும் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது தற்போது 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: கமலின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டுக்கு அனுமதி – மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை