காதல் விவகாரம்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி

Thoothukudi Crime News : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளது. இது தொடர்பாக மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் விவகாரம்..  பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி

இளைஞர் கொலை

Updated On: 

23 Sep 2025 06:30 AM

 IST

தூத்துக்குடி, செப்டம்பர் 23 : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதல் விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் பணியில் ஈடுபட் வந்தார். இவர் திருச்செந்தூரில் உள்ள வீரகாளியம்மன் தெருவில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக 2025 ஏப்ரல் மாதம் வெளியேறி உள்ளனர். தனது மகள் காணவில்லை என திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியை போலுசார் தேடினர்.

புகார் அளித்த மூன்று நாட்களுக்கு சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமியை புதுச்சேரியில் இருந்து போலீசார் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால், மணிகண்டன் மற்றும் சிறுமியின் குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், மணிகண்டன் வேலைக்ககாக 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று காலை பைக்கில் திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மணிகண்டன் மணிகண்டன் தோப்பூர் சந்திப்பு சாலையை அடைந்தபோது, சிறுமியின் 16 வயது தம்பி மற்றும் அவரது நண்பர்களான 16 வயதுடைய 2 பேர் வழிமறித்தனர்.

Also Read : காவல் நிலையத்தில் தஞ்சம்.. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் ஷாக்

பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை

அப்போது, மணிகண்டனின் மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வாக்குவாதம் நீடித்த நிலையில், மணிகன்டனை மூன்று பேரும் அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால், பதறிய மணிகண்டன், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு, தப்பி ஓடினார். இருப்பினும், மூன்று பேர் கொண்ட, மணிகண்டனை துரத்திச் சென்று, வெட்டியுள்ளனர்.

மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு, அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனை அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

Also Read : எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!

இதனை அடுத்து, மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மூன்று சிறுவர்களை போலீசார் பிடித்துள்ளனர். காதல் விவகாரத்தில் இளைஞர் ஓடஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.