திருப்பூரில் பயங்கரம்.. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி!
Tirupur Crime News : சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கூலிப்படையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக திருப்பூர் சென்றபோது, அங்கு 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

வழக்கறிஞர் கொலை
திருப்பூர், ஜூலை 29 : திருப்பூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக ஐந்து பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்ம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கசாமி. இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 35 வயதில் முருகானந்தம் என்ற மகன் உள்ளார். முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றி வந்தார். வழக்கின் விசாரணைக்காக முருகானந்தம் அதிகாரிகளுடன் திருப்பூருக்கு வந்திருந்தார். அப்போது, முருகானந்தனை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தாக்குதலி நடத்தியபோது, தடுக்க வந்த மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முருகானந்தனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், முருகானந்தம் கொலைக்கு தொடர்புடைய ஐந்து பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, முருகானந்தத்தின் தந்தை லிங்கசாமி பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். லிங்கசாமிக்கு அவரது தம்பி தண்டபாணியுடன் சொத்து தகராறு இருந்தது. தண்டபாணி தாராபுரத்தில் ஒரு தனியார் பள்ளியை நடத்தி வருகிறார்.
Also Read : மாணவிக்கு கத்திக்குத்து.. தந்தை கண்முன்னே இளைஞர் செய்த கொடூரம்.. அதிர்ந்த ராணிப்பேட்டை!
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
இந்த பள்ளி விதிகளை மீறி நான்கு மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அது சட்டப்படி குற்றமாகும் என முருகானந்தம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தண்டபாணிக்கும் முருகானந்தத்திற்கும் இடையிலான பகைமையை அதிகரித்தது.
இதனால், ஆத்திரத்தில் இருந்த தண்டபாணி, பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு நிலத்திற்கு முருகானந்தம் சென்றபோது, ஒரு கும்பலால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கூலிப்படை மூலம் தண்டபாணி முருகானந்தனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுகின்றனர்.
Also Read : சென்னையில் அதிர்ச்சி: மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு…
தொடர்ந்து, அவரது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் முருகானந்தனின் உடலை வாங்க மறுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை மாற்ற கோரியும், நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சினிமா பாணியில் கூலிப்படையால் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.