கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்… கரூர் மாவட்ட செயலாளர் கைது
Karur Stampede Case: தமிழக அரசு சார்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சார்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யயப்பட்டுள்ளார்.

மதியழகன் - விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) சார்பாக கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறை சார்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசு சார்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சார்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2 நாட்களாக பரப்புரை நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்ட செயலாளர் கைது
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மதியழகனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : கரூர் துயரம்.. த.வெ.க மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்படுவாரா?
இந்த நிலையில் மதியழகனுடன் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விவகாரத்தில அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக ஆனந்த் மீது கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
3 பேர் கைது
மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் அவதூறு பரப்பியதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சரத்குமார், சிவனேசன், பாஜகவைச் சேரந்த சகாயம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரப்பியதாக 25 சமூக வலைதள கணக்குகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க : கரூரில் பெருந்துயரம்.. ரத்து செய்யப்படுகிறதா விஜயின் பரப்புரை? அடுத்த பிளான் என்ன?
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் வந்தடைந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தவெக பரப்புரை நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.