அணுசக்தி துறையில் வரலாறு படைத்த இந்தியா.. அமெரிக்காவால் கூட முடியாததை சாத்தியமாக்கியது எப்படி?
Kalpakkam Nuclear Plant's New Achievement | எரிசக்தி சுதந்திரத்தை அடைவதற்கு இந்தியா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் செய்ய முடியாத சாதனையை சென்னையில் உள்ள கல்பாக்கம் அணு உலையில் விஞ்ஞானிகள் சாத்தியமாக்கியுள்ளனர்.

கோப்பு புகைப்படம்
கல்பாக்கம், ஏப்ரல் 09 : இந்தியா, எரிசக்தி சுதந்திரத்தை நோக்கிய தனது பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (PFBR – Prototype Fast Breeder Reactor) ஏப்ரல் 06, 2026 அன்று இரவு 8.25 மணிக்கு தனது முதல் கிரிட்டிகாலிட்டி (Criticality) நிலையை எட்டியுள்ளது. அமெரிக்காவால் (America) கூட சாதிக்க முடியாததை, இந்தியா சாதித்து காட்டியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எரிசக்தி சுதந்திரத்திக் முக்கிய மைல்கல்லை எட்டிய இந்தியா
கிரிட்டிகாலிட்டி நிலையை எட்டியுள்ளது என்பது, இந்த அணு உலை முதல் முறையாக தானாகவே தொடர்ச்சியான அணுக்குரு சங்கிலி வினையை தொடங்கியுள்ளது என்பது தான். இதன் மூலம் உலக அளவில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் கொண்ட இரண்டாவது உலக நாடு என்ற புதிய சாதனையையும் பெருமையையும் இந்தியா அடைந்துள்ளது.
இதையும் படிங்க : தமிழக சட்டமன்ற தேர்தல்.. இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் இந்த திட்டத்தை சாத்தியமாக்க மில்லியன் கணக்கான பணத்தை செலவு செய்து வருகின்றன. இந்த நிலையில், உலகின் வல்லரசு நாடுகளால் முடியாததை இந்திய விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியுள்ளது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டரின் முக்கியத்துவம் என்ன?
புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் என்பது சாதாரண அணு உலைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காரணம், சாதாரண அணு உலைகள் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்தி ஆற்றலை உருவாக்கும். ஆனால், புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் அவை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக அளவிலான எரிபொருளை உற்பத்தி செய்யும் சிறந்த ஆற்றல் கொண்டது.
இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் நிலவும்.. வானிலை மையம் எச்சரிக்கை
இந்த வகை அணு உலைகளை பயன்படுத்தி தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் உள்ள தோரியத்தை பயன்படுத்தி பல நூற்றாண்டுகளுக்கு நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துக்கொள்ள முடியும். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த திட்டத்தை வெற்றியடைய பில்லியன் கணக்கான பணத்தை செலவு செய்தும் தோல்வியை தழுவின. ஆனால், இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து, பல்வேறு சவால்களை கடந்து இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.