போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை..

Drug Abduction Case: பொதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் போதை பொருள் இல்லாத நிலையில், அவருக்கு சம்மன் கொடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை..

நடிகர் ஸ்ரீகாந்த்

Published: 

23 Jun 2025 14:01 PM

 IST

போதைப்பொருள் வழக்கு: சென்னை நுங்கம்பாக்கத்தில் பார் மோதல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார் உட்பட 9 நபர்கள் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் மீது பல மோசடி புகார்கள் வந்த நிலையில் அதிலும் அவர் கைது செய்யப்பட்டார். இவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது கொக்கைன் போதை பொருள் கடத்தல் நபருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிரசாத்தின் நண்பரான சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார் மற்றும் மேற்கு ஆப்ரிக்கா கானா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோரை கைது செய்தனர்.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை:

இவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரசாத்திற்கு கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பிரதீப் குமார் கொக்கைன் போதை பொருளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் சப்ளை செய்வது போல், நடிகர் ஸ்ரீகாந்தும் போதை பொருள் வாங்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் போதை பொருள் இல்லாத நிலையில், அவருக்கு சம்மன் கொடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் மீண்டும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் தான் போதை பொருள் பயன்பாடு குறித்த விவரங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலத்தில் ப்ரதீப் சொன்ன தகவல்:

இந்த நிலையில் ப்ரதீப்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடமும் போலிசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையின் போது, ஸ்ரீகிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும் பிரசாத் மூலமாக என்னிடம் இருந்து கொக்கைன் பயன்படுத்தியதை நேரடியாகவே பார்த்துள்ளேன் என்றும், இதுவரை பிரசாத்திற்கு 40 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவும் 5 லட்சம் வரை சம்பாத்தித்தாக கைதான ப்ரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..