தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.வி மாற்றம்.. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு!

Tamil Nadu Governor RN Ravi Changed | தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் உட்பட 9 ஆளுநர்களை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.வி மாற்றம்.. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு!

ஆளுநர் ஆர்.என்.ரவி

Updated On: 

06 Mar 2026 21:01 PM

 IST

சென்னை, மார்ச் 06 : தமிழ்நாடு (Tamil Nadu) , மேற்கு வங்கம் (West Bengal),  உள்ளிட்ட இந்தியாவின் 9 ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், எந்த எந்த மாநிலங்களுக்கு யார் யார் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

9 ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்ட குடியரசு தலைவர்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், நாகாலாந்து, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 9 ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று (மார்ச் 05, 2026) முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதையும் படிங்க : இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள்… இருவரை கைது செய்த கடலோர காவல் படை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்

அந்த வகையில் தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கேரளா ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல இமாச்சல பிரதேச ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மா, மராட்டிய மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி

நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து ஆளுநராகவும், சையத் அட்டா ஹஸ்னைன் பீகார் ஆளுநராகவும்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். லடாக் ஆளுநர் கவிந்தர் குப்தா இமாச்சல பிரதேச ஆளுநராகவும், டெல்லி ஆளுநர் வினய்குமார் சச்லேனா, லடாக் ஆளுநராகவும், தரன்ஜித் சிங் சிந்து டெல்லி ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..