AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 3 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும் அதே நேரம் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Apr 2026 06:12 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6, 2026 அன்று திங்கள்கிழமை விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களின் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியைை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 6, 2026 அன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

இதையும் படிக்க : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சவால்: 3 மொழி கட்டாயம்..!

இந்த 3 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு

மேலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 7 மற்றும் 8, 2026  செவ்வாய், புதன்கிழமைகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 11, 2026 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகர் பகுதிகளில் ஏப்ரல் 6, 2026 திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் ஏப்ரல் 5, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 70 மி.மீ. மழை பதிவானது. வேலூர்
பொன்னை அணை. திருநெல்வேலி காக்காச்சி, நீலகிரி மாவட்டம் பார்வூட் , கடலூர் மாவட்டம் தொழுதூர் ( ஆகிய இடங்களில் தலா 50 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் அவதி

மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சேலம் மாவட்டம்  ஏத்தாப்பூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் , பெலாந்துறை, பெரம்பூர், கிருஷ்ணபுரம் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ. மழையும்  பதிவானது.

வெப்பநிலையை பொறுத்தவரை  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 9, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us