Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamilnadu Weather: தமிழகம் முழுவதும் பரவலாக மழை.. இதுதான் காரணமா?

Chennai Weather Today: காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து மக்கள் மகிழ்ச்சி. சென்னை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tamilnadu Weather: தமிழகம் முழுவதும் பரவலாக மழை.. இதுதான் காரணமா?
மழை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 03 Oct 2025 06:32 AM IST

தமிழ்நாடு, அக்டோபர் 3: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் என சொல்வார்கள். அதற்கேற்றாற்போல இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே ஐப்பசி பிறக்க உள்ள நிலையில் வானிலை வெயில், மழை என எதிர்பாராத வகையில் மாறி, மாறி வருகிறது. இப்படியான நிலையில் தமிழகத்தின் கோயம்புத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

Also Read:   உத்தரகாண்டை புரட்டிப்போட்ட மேகவெடிப்பு கனமழை!

என்ன காரணம்?

இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் நல்ல மழைப்பொழிவு இருப்பது பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவி வரும் நிலையில், இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர தொடங்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்ட இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2025, அக்டோபர் 2ஆம் தேதியான நேற்று கோபல்பூரில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.

Also Read: சென்னை மக்களே ரெடியா? வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

இந்த தாழ்வு மண்டலமானது மேலும் நகர்ந்து ஒடிசா மற்று அதனை ஒட்டிய ஆந்திரா கடலோரப் பகுதிகளில் உள்ள கோபல்பூர் மற்றும் பாராதீப் பகுதிக்கு இடையே நேற்றிரவு  அல்லது இன்று (அக்டோபர் 3) காலையில் கரையை கடக்கக் கூடும் என கணிக்கப்பட்டிருந்தது.

தொடரும் மழை 


இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை அக்டோபர் 4ம் தேதி வரை மிதமான மழை விட்டு விட்டு பெய்யும் என கூறப்பட்டுள்ளது.