வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நல்ல மழை பதிவு இருந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம் , அக்டோபர் 1, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவு மட்டுமே இருந்துள்ளது. குறைந்து வரும் நிலையில் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் 30, 2025 தேதியான நேற்று மதியம் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு ஒன்று உருவானது. அது அக்டோபர் 1, 2025 தேதியான இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 3, 2025 ஆம் தேதி வாக்கில் கரையை கடக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொட்டப்போகும் மழை:
இதன் காரணமாக அக்டோபர் 1, 2025 தேதி யான இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அக்டோபர் 2, 2025 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ’யார் சொல்லியும் விஜய் கேட்கல’ கரூர் சம்பவத்தில் உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!
அதே சமயம் அக்டோபர் 3, 2025 அன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4, 2025 அன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7, 2025 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பதிவாக கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நல்ல மழை பதிவு இருந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஊட்டி போறீங்களா? 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள்.. சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான அல்லது மிதமான மழை பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.