அரசுப் பணியை ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், டி. பரத சக்கரவர்த்தி, சி. குமரப்பன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 07: மருத்துவக் காரணங்களுக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களைப் பெற தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்ற மூன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியப் பலன்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதின்றம் முக்கியத் தீர்ப்பை அளித்துள்ளது. அதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மாறுபட்ட தீர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி:
பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், டி. பரத சக்கரவர்த்தி, சி. குமரப்பன் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி குறித்த முந்தைய மாறுபட்ட தீர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இத்தீர்ப்பை அமர்வு வெளியிட்டது.
இதற்காக ராஜினாமா செய்வோருக்கே ஓய்வூதியம்:
அதன்படி, அந்த தீர்ப்பில், “அரசுப் பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா என நான்கு அம்சங்கள் உள்ளன. இந்த சொற்றொடர்கள் வெவ்வேறு அர்த்தங்களைத் தருகின்றன. தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மனச்சோர்வு, பலவீனம் போன்ற மருத்துவ காரணங்களால் ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க வகை செய்கின்றன. மற்ற மருத்துவ காரணங்களைச் சொல்லி ராஜினாமா செய்பவர்கள், முந்தைய பணிக்காலத்தை இழந்துவிடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தனர்.
அரசின் டேப்ஸ் ஓய்வூதிய திட்டம் அமல்:
முன்னதாக, மிழக அரசு புதிதாக அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 2026 ஜன.1-ம் தேதி முதல் அமல்படுத்துவதாக அறிவித்து, தற்போது அரசாணை வெளியிட்டது. அதன்படி, (TAPS) டேப்ஸ் திட்டத்தின்கீழ் வரும் தகுதியான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி இணைந்த மாத ஊதியத்தில் 50 சதவீதத்துக்கு சமமான உறுதிப்படுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அரசு ஊழியர்கள் தங்கள் மாத ஊதியத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பார்கள்.
உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான முழு கூடுதல் நிதியையும் தமிழக அரசே ஏற்கும். சிபிஎஸ் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, டேப்ஸ் செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அவர்களது சேவைக் காலத்துக்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!
2026 ஜன.1 முதல் பணியில் சேரும் தகுதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் டேப்ஸ் திட்டம் கட்டாயமாகும். சிபிஎஸ் கீழ் உள்ள மற்றும் 2026 ஜன.1-ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஓய்வு பெறும் அனைத்து தகுதியான அரசு ஊழியர்களும் அறிவிக்கப்பட உள்ள விதிகளுக்கு உட்பட்டு, டேப்ஸ் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.