“என்னுடன் இருப்பவர்களை அமைச்சர்களாக பார்க்க ஆசை”.. டிடிவி தினகரன் கொடுத்த ஷாக்!!

TTV Dhinakaran not contesting in election: ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர். அவர் தர்மயுத்தம் துவங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில், மீண்டும் முதலமைச்சராக வந்திருப்பார் இது உங்களுக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில தர்ம சங்கடங்கள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

என்னுடன் இருப்பவர்களை அமைச்சர்களாக பார்க்க ஆசை.. டிடிவி தினகரன் கொடுத்த ஷாக்!!

டிடிவி தினகரன்

Updated On: 

26 Jan 2026 16:42 PM

 IST

தேனி, ஜனவரி 26: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தன்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்களை அமைச்சர்களாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; ஆனால் அதற்காக அழுத்தம் தர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், ஆட்சியில் அதிகாரம் கேட்டு அக்கூட்டணியில் குழப்பம் நிலவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை கூட்டணி மட்டுமே இறுதியாகியுள்ள நிலையில், அவர்களின் தொகுதி உடன்பாடு எப்படி எடுக்கப்பட உள்ளது என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும்:

இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் எப்படி அண்ணாவை மறந்திருப்போம். அவரது கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா. நாங்கள் எல்லாம் வெகுண்டெழுந்தால் தப்பாக போய்விடும். ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், தனது படத்திற்கான டிக்கெட் பிளாக்கில் விற்பதை எப்போதாவது தடுக்க முடிந்ததா? ரூ.100 டிக்கெட்டை ரூ.2000 வரை விற்பதை ஒழிக்காதவர் நாட்டின் ஊழலை எப்படி ஒழிப்பார்? வீட்டினுள் அமர்ந்து கொண்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என்று பேசி வரும் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும் என்றார்.

ஓபிஎஸ் மீண்டும் முதல்வராக வந்திருப்பார்:

தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் ஒன்றினைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம்தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர். அவர் தர்மயுத்தம் துவங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில், மீண்டும் முதலமைச்சராக வந்திருப்பார் இது உங்களுக்கே தெரியும். ஓ.பன்னீர்செல்வத்திற்கு சில தர்ம சங்கடங்கள் உள்ளது என்றார். மேலும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று தான் கூறினேன் தவிர ஒரே கட்சியில் இணைய வேண்டும் என கூறவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?