Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு.. விசாரணையில் தெரிய வந்த பகீர் பின்னணி!

Hosur Child Murder Shocking Information Revealed | கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பல திடுக்கிடும் தலவல்கள் வெளியாகியுள்ளன. .இந்த கொடூர கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு.. விசாரணையில் தெரிய வந்த பகீர் பின்னணி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2025 10:59 AM

ஒசூர், ஜூலை 05 : கிருஷ்ணகிரியில் (Krishnagiri) 13 வயது சிறுவனின் உடல் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உல்லாசமாக இருப்பதை சிறுவன் கண்ட நிலையில், சிறுவன் அது குறித்து வெளியே சொல்லிவிடுவாரோ என நினைத்து இளைஞரும் அவரது நண்பரும் இணைந்து இந்த கொடூர செயலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சிறுவன் கொலை செய்யப்ப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவராஜ் – மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது 13 வயது மகன் ரோகித் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுவன் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே அன்றைய தினம் மாலை சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். ஆனால், மாலை வெகுநேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சோதனை செய்த போலீஸ்

இந்த நிலையில், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார், சிறுவன் காரில் கடத்தில் செல்லப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணையை போலீசார் முடுக்கிய நிலையில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள கீழ்பள்ளம் வனப்பகுதி குடிநீர் தொட்டி அருகில் சிறுவனின் உடல் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையில் தெரிய வந்த பகீர் தகவல்கள்

இந்த நிலையில், இது குறித்து போலீசார் மாதேவன் மற்றும் மாரப்பன் ஆகிய இளைஞர்களை விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மாதேவன் 20 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்துள்ளார். இதனால், சிறுவன் பார்த்ததை வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் மாதேவன் தனது நண்பர் மாதேவாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இருவரும் சிறுவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, சிறுவனை ஏமாற்றி காரில் அழைத்துச் சென்ற அவர்கள் சிறுவனை கொலை செய்து 50 அடி பள்ளத்தில் சிறுவனின் உடலை வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.