இந்திய இசை உலகின் பிரபல குரல்களில் ஒன்றாக விளங்கிய ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை, வெற்றிகளாலும் வேதனைகளாலும் நிறைந்த ஒன்றாக இருந்தது. அவருக்கு கணபத்திராவ் போஸ்லே உடனான முதல் திருமணத்தில் ஹேமந்த், வர்ஷா, ஆனந்த் என மூன்று குழந்தைகள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் ஹேமந்த் போஸ்லே, திரைப்படங்களுக்கு இசை அமைத்ததுடன், பல பாடல்களிலும் பங்களிப்பு செய்தவர்.