தமிழ்நாட்டில் ஹிந்தி மொழிக்கு தடையா? பாடல்கள், திரைப்படங்கள் வெளியாகாதா? உண்மை என்ன?
Hindi Ban Rumour : தமிழ்நாடு அரசு ஹிந்தி மொழிக்கு எதிரான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதன் படி ஹிந்தி மொழி பாடல்கள், பெயர் பலகைகள், படங்கள் ஆகியவற்றுக்கு தடவிதிக்கப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவல் போலியானது என தமிழக அரசு மறுத்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அக்டோபர் 15 : தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி எதிர்ப்பு என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஹிந்தியை திணிக்க முயல்வதாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடைகளில் உள்ள பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி (Hindi) பெயர்களை அழிக்கும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஹிந்தி மொழிக்கு தடைவிதிக்கும் மசோதாவா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த தகவலை தமிழக அரசு முற்றிலும் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹிந்திக்கு எதிராக மசோதா?
தமிழ்நாட்டில் ஹிந்தி மொழிக்கு தடை விதிப்பது தொடர்பாக மசோதா ஒன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. அந்த மசோதாவில், தமிழ்நாட்டில் ஹிந்தி மொழியில் உள்ள விளம்பர பலகைகள், பெயர் பலகைகள், பாடல்கள், திரைப்படங்கள், போஸ்டர்கள் போன்றவற்றைத் தடை செய்யும் விதமான பிரிவுகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக அமையுமா என்பது குறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு தரப்பில் விளக்கம்
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து அளித்த விளக்கத்தில், திமுக தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, திமுக அரசியலமைப்புக்கு எதிராக அதையும் செய்யமாட்டார்கள, அதன் படி தான் நடப்போம். நாங்கள் ஹிந்தி திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள். மொழிக்கு அல்ல என்றார்.
இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. அதில் வெளியிட்டுள்ள பதிவில் ஹிந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக பரவும் செய்தி முற்றிலும் வதந்தி. அப்படி எந்தவொரு மசோதாவும் முன்மொழிவும் பெறப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிக்க : தீபாவளியன்று இந்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், சரவெடிகளை தவிருங்கள் – தமிழக அரசு அறிவிப்பு
உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி !
தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.
இது…
— TN Fact Check (@tn_factcheck) October 15, 2025