Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Sports Infrastructure Boost: முதல்வர் கோப்பை நிறைவு விழா அக்டோபர் 14, 2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Oct 2025 20:47 PM IST

சென்னை, அக்டோபர் 14:  முதலமைச்சர் கோப்பை (Chief Minister’s Cup) விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா அக்டோபர் 14, 2025 இன்று செவ்வாய்க்கிழமை சென்னை நேரு உள்நாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில்  விளையாட்டுத்துறைக்கான உட்கட்டமைப்புக்காக ரூ.170.31 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.  ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில், உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக விளையாட்டுத் துறைக்கு இதுவரை ரூ.1,945.07 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு நிதி ஒதுக்குவது மற்ற எந்த மாநில அரசும் செய்யவில்லை. இது தமிழ்நாட்டின் பெருமை என்றார்.

இதையும் படிக்க : Weather Update: வடகிழக்கு பருவமழை எப்போது? – பிரதீப் ஜான் வெளியிட்ட தகவல்!

ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம்

மேலும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார். இதற்கான திட்டங்களை அரசு வகுத்துள்ளது இதன் மூலம் கிராமப்புறங்களில் விளையாட்டு திறன்கள் மேம்படும் வாய்ப்புகளு உருவாகும் என்றார்.  இந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையின் பொற்காலம் ஆகும். விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் அரசு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. உங்கள் கவனம் விளையாட்டில் இருக்கட்டும். வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்குங்கள் என்றார்.

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முன்னிலை

அவரைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கில், கலைஞர் கருணைநிதி முதன்முதலில் விளையாட்டுத்துறையில் அமைச்சகம் அமைத்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் முன்னணியில் நிற்கிறது. இதற்குச் சிறந்த உதாரணம் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் என்றார்.

இதையும் படிக்க : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் 4 லட்சம் வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் 2025 ஆம் ஆண்டில் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். இது இந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பை காட்டுகிறது. முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு வீரர்களை உருவாக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. உழைப்பும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம். முதல்வர் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளார்’ என்றார்.