Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu CM MK Stalin: மகாராஷ்டிராவில் கிளம்பிய இந்தி எதிர்ப்பு.. முதல் ஆளாக ஆதரவை தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Maharashtra Scraps Hindi Imposition: மகாராஷ்டிராவில் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அம்மாநில அரசு அந்தக் கொள்கையை ரத்து செய்துள்ளது. இந்தித் திணிப்புக்கு எதிரான மகாராஷ்டிராவின் போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தமிழ் மொழி உரிமைப் போராட்டத்தின் வெற்றி என பலரும் கருதுகின்றனர்.

Tamil Nadu CM MK Stalin: மகாராஷ்டிராவில் கிளம்பிய இந்தி எதிர்ப்பு.. முதல் ஆளாக ஆதரவை தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்தி எதிர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவுImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2025 19:01 PM

சென்னை, ஜூலை 05: மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி, அரசியல் சூழ்நிலையும் சூடுபிடித்தது. இதையடுத்து, பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா (Maharashtra) அரசு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது, அரசியல் சூழ்நிலையும் சூடுபிடித்தது, இறுதியாக ஃபட்னாவிஸ் அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டியதாயிற்று. இந்தி கட்டாயம் தொடர்பான 2 பொது ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் (Maharashtra CM Devendra Fadnavis) சமீபத்தில் அறிவித்தார், மேலும் சிவசேனா மற்றும் எம்என்எஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இது மராத்தி மொழிக்கும் மராத்தி அடையாளத்திற்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தது மட்டுமின்றி, 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் ஒன்று சேர்ந்து இன்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி ஒரே மேடையில் பேசினர். இதில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM Stalin) தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவின் சில முக்கிய கருத்துகள்:

  • இந்தித் திணிப்பை முறியடிக்க திமுக, தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 3வது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும், அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.
  • இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
  • “உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன, இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்? என்று ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு:

  • மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி – சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
  • தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!