நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமனழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Rain Alert : தமிழகத்தின் சில பகுதிகளில் வான்மண்டல சுழற்சி நிலவி வரும் நிலையில், நவம்பர் 7, நவம்பர் 8, 2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 6 : தமிழகத்தில் நவம்பர் 7, 2025 அன்று ராமநாதபுரம் (Ramanathapuram), சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகத்தின் சில பகுதிகளில் வான்மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கம் காரணமாக, நவம்பர் 7, நவம்பர் 8, 2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் நவம்பர் 7, 2025 ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் நவம்பர் 7, 2025 சனிக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பள்ளி, அலுவலகம் செல்பவர்கள் எச்சிரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Rain Alert | தமிழகத்தில் இன்று இந்த 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!!
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரு மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் மீனவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நவம்பர் 6, 2025 அன்று காலை 8.30 மணி படி தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க : வெப்பசலனம் காரணமாக மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன ரிப்போர்ட்..
மேலும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருவாருர் மாவட்டம் குடவாசல், பெரம்பலூர் மாவட்டம் வெப்பந்தட்டை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் வல்லம், மரக்காணம், வானூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும் பதிவாாகியுள்ளது. இந்த விவரங்களை வானிலை ஆய்வும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.