Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

7 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?

Tamil Nadu Rain Alert: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாகவும், கடல் காற்றின் தாக்கத்தினாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பதிவானது.

7 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், நவம்பர் 5, 2025: ஆந்திரக் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 5, 2025 தேதியான இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நவம்பர் 6, 2025 தேதியான நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நவம்பர் 10, 2025 வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 9 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்… ரத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி – சென்னையில் பரபரப்பு

சென்னையில் பதிவான கனமழை – பிரதீப் ஜான்:


இது ஒரு பக்கம் இருக்க, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாகவும், கடல் காற்றின் தாக்கத்தினாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பதிவானது. வடதமிழகம், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பதிவாகியுள்ளது. இதனால் பூமியின் உஷ்ணம் சற்று தணிந்து காணப்படுகிறது.

மேலும் படிக்க: கோவை சம்பவம் : இப்படி ஒரு சம்பவம் யாருக்கும் நேரக்கூடாது – துணை குடியரசுத் தலைவர் கண்டனம்

நவம்பர் மாதத்தில் வறண்ட வானிலை இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான அல்லது மிதமான மழையும் பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.