கனமழை: இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
School Leave: தமிழக உள் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், திருப்பத்தூரில் காலையில் இருந்து தொடர் கனமழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர், நவம்பர் 06: திருப்பத்தூர் மாவட்டத்தில் காலையில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திர வல்லி அறிவித்துள்ளார். முன்னதாக, இன்றைய தினம் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னறிவித்திருந்தது.
அதிகாலை முதல் கனமழை:
அதன்படி, திருபத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு காலை பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். சிறுவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வராது என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




அதேசமயம், வானிலை மையம் முன்னறிவித்தபடி, அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனினும், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
Also read: நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா? விஜய் ஆவேசம்!
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
இதனிடையே, தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.