திருமணத்திற்கு முந்தைய நாள் காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய மணமகன்.. மணமகள் வீட்டார் ஷாக்!

Groom Eloped with his Girlfriend | கன்னியாகுமரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய நாள் காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய மணமகன்.. மணமகள் வீட்டார் ஷாக்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Sep 2025 08:41 AM

 IST

கன்னியாகுமரி, செப்டம்பர் 06 : கன்னியாகுமரியில் (Kanyakumari) திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் பங்கேற்ற நிலையில், திருமணத்திற்காக மணமகள் வீட்டார் தயாராகியுள்ளனர். இந்த நிலையில், மணமகனின் குடும்பத்தார் பெண் வீட்டிற்கு இந்த தகவலை தெரிவித்த நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டது. திருமண வரவேற்பு வரை சென்ற திருமணம் பாதியில் நின்றது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணத்திற்கு முந்தைய நாள் காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய மணமகன்

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் கேரள மாநிலம் பாலாபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு செப்டம்பர் 03, 2025 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டு சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அடுத்த நாள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பாமக பிரமுகர்.. தஞ்சையில் பதற்றம்

திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்

திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மணமகள் வீட்டார் பிஸியாக இருந்த நிலையில், மணமகன் வீட்டில் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய மணமகனின் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தும்படி கூறியுள்ளனர். மேலும், மணமகன் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு மணமகள் வீட்டார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பின்னர் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு, திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

இதையும் படிங்க : தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத குழந்தை பலி.. வீட்டில் விளையாடியபோது விபரீதம்.. ஆவடியில் அதிர்ச்சி!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது காதலியுடன் ஓடிப்போன சம்பவம் இரு வீட்டார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.