தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. காலையில் பனியும் இருக்கும்.. வானிலை ரிப்போர்ட் இதோ..
Weather Forecast: தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டமும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 01: தமிழகத்தில் இன்று (பிப்.1) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், நேற்றைய தினம் ஓரு சில இடங்களில் மழை பெய்தது.
இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!
இன்றைய வானிலை நிலவரம்:
இந்நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திகுறிப்பில், தமிழகத்தில் இன்று (பிப்.1) ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டமும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். என்று தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, பிப்ரவரி 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 3ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும், 4ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், 5ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், 6ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று முன்னறிவித்துள்ளது. அதேசமயம், வரும் 2, 3, 4-ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸ் அளவில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. மீனவர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
கடந்த 24 மணி நேரத்தில்:
தமிழகத்தில் ஜன.31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 16.5 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதியான ஊட்டியில் 6.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.