2026-இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி…எப்போது நடக்கிறது தெரியுமா…வெளியான அறிவிப்பு!

First Jallikattu Competition Of 2026 Taking Which Place?: 2026- ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக் கட்டு போட்டி நடத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த போட்டி, எங்கு, எப்போது நடக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

2026-இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி...எப்போது நடக்கிறது தெரியுமா...வெளியான அறிவிப்பு!

2026- இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அறிவிப்பு

Updated On: 

31 Dec 2025 17:26 PM

 IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ. அதே ஆர்வம் சற்றும் குறையாமல் அதை பார்க்கும் பொதுமக்களிடமும் இருந்து வருகிறது. இதனால், டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலேயே ஜல்லிக்கட்டு போட்டி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் தவறாமல் எழுந்து விடும். தற்போது, இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026- ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளது.

ஆண்டின் முதல் ஜல்லிக் கட்டு போட்டி

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை ஒன்றியம், தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறுவது வழக்கம் ஆகும். அதன்படி, 2026- ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 3- ஆம் தேதி ( சனிக்கிழமை) தச்சன்குறிச்சி கிராமத்தில் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: 2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

ஜல்லிக் கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பம்

இதில், ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கு தேவையான விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த போட்டிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, காப்பீட்டு ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடர்பு இல்லாத இடங்களில் அந்தப் போட்டியை நடத்த அனுமதி கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யக்கூடாது என்று ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாடு பிடி வீரர்கள் – மாடுகள் பதிவு செய்யும் பணி

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் டோக்கன் எண்கள் வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள். இவ்வாறாக போட்டியில் மாட்டை பிடித்து வெற்றி பெறும் மாடு பிடி வீரருக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் செல்லும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

புதுக்கோட்டையில் எதற்காக முதல் ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குருச்சியில் தான் நடைபெறுகிறது. இதன் பின்னரே, மற்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. தமிழகத்தில் அதிக வாடிவாசல் உள்ள மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..