AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புத்தாண்டு கொண்டாட்டம்.. இந்த ரூட்ல போக முடியாது.. போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..

Traffic Diversion: 31.12.2025 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியாட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் பெருந்தொகையான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்.. இந்த ரூட்ல போக முடியாது.. போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Dec 2025 10:29 AM IST

டிசம்பர் 31, 2025 தேதி இன்று மாலை முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று நள்ளிரவு புத்தாண்டை விமரிசையாக கொண்டாட உள்ளனர். இந்த கொண்டாட்டங்களின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும், மெரினா கடற்கரையில் இன்று மாலை முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரை பகுதிகளில் தடுப்புகள் மற்றும் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றங்கள் – மெரினா மற்றும் எலியாட் கடற்கரை பகுதிகள்

31.12.2025 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியாட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் பெருந்தொகையான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம் – பட்டாசுகள் வெடிக்க தடை… என்னென்ன கட்டுப்பாடுகள்?

காமராஜர் சாலை  பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

  •  கடற்கரை உட்புற சாலை 31.12.2025 அன்று 19.00 மணி முதல் 01.01.2026 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 19.00 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
  •  காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2025 20.00 மணி முதல் 01.01.2026 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
  •  அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, நெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஆர்.கே. மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
  • பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
  •  வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது, சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்ன் வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்) பாரதி சாலை மற்றும் விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்) லாயிட்ஸ் சாலை நடேசன் சாலை மற்றும் டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
  •  தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு சாலையிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
  •  கொடி மரச் சாலையில், இரவு 20.00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
  •  கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர் கே மட் சாலையில் உள்ள U திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு (சாய்பாபா கோயில்) நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆர்.பி.ஐ சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்தீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து தங்கள் இலக்கை அடையலாம்.
  •  அனைத்து மேம்பாலங்களும் 31.12.2025 அன்று 22.00 மணி முதல் 01.01.2026 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்

காமராஜர் சாலை –  வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

  • சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை நோக்கி – ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி – ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • தீவுத்திடல் மைதானம்
  • பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
  • பிரஸ் கிளப் சாலை
  • பொதுப்பணித்துறை வளாகம் காவல்துறை வாகனங்கள் மட்டும்
  • கலைவாணர் அரங்கம் 8. விக்டோரியா விடுதி
  • பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை X பாரதி சாலை சந்திப்பில் இருந்து – ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • லாயிட்ஸ் சாலை (மாற்று திறன் ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் நடேசன் சாலையை நோக்கி – ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • இராணிமேரிகல்லூரி வளாகம்.
  • லேடி வெலிங்டன் பள்ளி
  • டாக்டர் பெசன்ட் சாலை (எம்.ஆர்டி எஅருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி-ஒற்றை வரிசை நிறுத்தம்)
  • பரத் சாரணர் வளாகம்
  • தெற்கு கால்வாய் சாலை (மந்தவெளி நோக்கி & பட்டினம்பாக்கம் நோக்கி

 எலியாட் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

  •  31.12.2025 அன்று 20.00 மணி முதல் 01.01.2026அன்று 06.00 மணி வரை6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
  • 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

எலியாட்  கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

  •  பெசன்ட் நகர் 4வது அவென்யூவில் ஒரு பக்கம் – ஒற்றை வரிசைவாகனநிறுத்தம்
  • பெசன்ட் நகர் 3வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் ஒற்றை வரிசை வாகனநிறுத்தம்
  • பெசன்ட் நகர் 4வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் ஒற்றை வரிசை வாகனநிறுத்தம்
  • பெசன்ட்நகர் 5வது அவென்யூவில் ஒரு பக்கம்- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 2 வது அவென்யூவில் ஒரு பக்கம்- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 3 வது அவென்யூவில் ஒரு பக்கம் ஒற்றை வரிசைவாகன நிறுத்தம்
  • ஆல்காட் பள்ளி, பெசன்ட் நகர்