சிவகங்கை: தலையை துண்டித்து விவசாயி கொல்லப்பட்ட கொடூரம்: இளைஞர் கைது!
Farmer Beheaded in Sivagangai: சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில் 63 வயதான விவசாயி சோனைமுத்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்தபோது மூவரால் வாளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கண்மாயில் சோனைமுத்து அவரது தலை மீட்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
சிவகங்கை ஜூலை 22: சிவகங்கை மாவட்டம் (Sivaganga District) நாட்டாகுடியில் விவசாயி சோனைமுத்து (63) (Farmer Sonaimuthu) வாளால் தலையை துண்டித்து கொலை (Murder) செய்யப்பட்டார். 100 நாள் வேலை திட்டம் காரணமாக அங்கு தங்கி இருந்தவர். மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்கியதுடன், தலையை வெட்டி எடுத்துச் சென்றனர். பாண்டி என்ற ஒருவரும் தாக்கப்பட்டார். போலீசார் தேடுதல் வேட்டையில் கண்மாயிலிருந்து தலையை மீட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டு, மற்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. விவசாயி சோனைமுத்து கொலையில் மேலும் யார் யார் ஈடுபட்டுள்ளனர்? கொலையின் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சோனைமுத்துவின் தலையை வாளால் துண்டித்து கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த நாட்டாகுடியைச் சேர்ந்த 63 வயதான விவசாயி சோனைமுத்து, மதுரை தல்லாகுளத்தில் வசித்து வந்தவராகும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிய நாட்டாகுடிக்கு வந்த அவர், தங்கி இருந்த வீட்டின் வாசலில் பாண்டி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பேர், திடீரென சோனைமுத்துவின் தலையை வாளால் துண்டித்து கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற பாண்டியும் வெட்டப்பட்டார். சோனைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாவட்ட எஸ்பி சம்பவம் குறித்து விசாரணை
இந்த கொடூரத்தில், தாக்கியவர்கள் சோனைமுத்துவின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு உடலை அங்கு விட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்த மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் மற்றும் திருப்பாச்சேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோனைமுத்துவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொலைந்த தலையை சூரக்குளம் ரோட்டில் இருக்கக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில், போலீசார் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் பின்னர், சிவகங்கை அருகே உள்ள ஒரு கண்மாயில் இருந்து சோனைமுத்துவின் தலையை மீட்டனர். உடலுடன் இணைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது! விசாரணை
இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார், மானாமதுரை துணை எஸ்பி பார்த்திபன் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பி.வேலாங்குளத்தைச் சேர்ந்த சிங்கமுத்து (22) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி சோனைமுத்து கொலையில் மேலும் யார் யார் ஈடுபட்டுள்ளனர்? கொலையின் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.