அது டப்பா எஞ்சின் – பிரதமரின் விமர்சனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

MK Stalin Answers PM’s Criticism : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அது டப்பா எஞ்சின் - பிரதமரின் விமர்சனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி

Published: 

23 Jan 2026 19:51 PM

 IST

சென்னை ஜனவரி 23 : பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கூறும் டபுள் எஞ்சின் அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது என்றும், அது உண்மையில் டப்பா எஞ்சின் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கடுமையாக விமர்சித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரதமரின் உரையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரதமரின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்

அந்த அறிக்கையில், “பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது. மாண்புமிகு பிரதமர் அவர்களே, ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, நீங்கள் சொல்லும் டபுள் எஞ்சின் மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் டப்பா எஞ்சின் நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது என்றார்.

இதையும் படிக்க : ஓபிஎஸ் நிலை என்ன? மீண்டும் NDA கூட்டணியில் இணைவாரா?.. அண்ணாமலை பளீச்!!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

 

மேலும், தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தேசிய ஜனநாயக அரசின் துரோகம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது என குறிப்பிட்டுள்ளார்.” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு விடை கொடுக்க தயாரான தமிழ்நாடு – பிரதமர் மோடி..

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் துரோகங்களை மறைக்க முயன்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அந்த துரோகங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “தில்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு ஒருபோதும் தலைகுனியாது” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிக்கை, பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நேரடியான அரசியல் பதிலடியாக பார்க்கப்படுவதால், மாநில அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..