Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மொழிப்போர் தளபதி”.. திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்..

எல்.ஜி என அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், மொத்தம் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த எல்.கணேசன், தஞ்சை பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், இன்று காலை காலமானார்.

“மொழிப்போர் தளபதி”.. திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்..
திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Jan 2026 11:02 AM IST

தஞ்சாவூர், ஜனவரி 04: திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான எல்.கணேசன் (92) உடல்நலக்குறைவால் காலமானார். தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன், மொழிப்போர் தளபதி என அழைக்கப்பட்டவர் ஆவார். திமுக உயர்நிலைத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது மறைவு திராவிட இயக்கத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2004-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வானார். மேலும், 1980-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: நான் தான் கடவுள்.. கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றி பிரச்சனை செய்த நபர்.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு..

சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர்:

அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய உறவை கொண்டிருந்த எல். கணேசன், திராவிட இயக்க அரசியலில் முக்கியமான பாத்திரம் வகித்தவர். தனது அரசியல் வாழ்க்கையில் மக்களின் உரிமைகளுக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என அவரது ஆதரவாளர்கள் நினைவு கூறுகின்றனர். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்றதற்காக, அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். அந்த அனுபவங்கள் அவரது அரசியல் உறுதியை மேலும் வலுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மக்களவை, மாநிலங்களவை எம்.பியாக இருந்தவர்:

வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்ற எல். கணேசன், சில ஆண்டுகளில் மீண்டும் திமுகவிற்கே திரும்பினார். எல்.ஜி என அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், மொத்தம் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுள்ளார். மாநிலங்களவை எம்.பியாக இருந்த போது, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். 2004ஆம் ஆண்டு திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எல்.கணேசன், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

மேலும் படிக்க: ஜன.9ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்.. 10,000 பேரிடம் 5 நாட்களில் நடக்கிறது..

4 வகையான பதவிகளையும் வகித்தவர்:

சட்ட மேலவை, சட்டசபை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் என நான்கு வகையான பதவிகளையும் வகித்தவர் எல்.கணேசன். மொழிப்போர் தளபதி என அழைக்கப்பட்ட இவர், அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த எல்.கணேசன், தஞ்சை பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.