இபிஎஸ் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்குதல்.. திமுக கண்டனம்!

Edappadi k Palaniswami Campaign: திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆளில்லா ஆம்புலன்ஸ் குறித்து அணைக்கட்டு கூட்டத்தில் பேசிய தனது கருத்துகளால் தான் இச்சம்பவம் நிகழ்ந்ததாக திமுக எம்எல்ஏ எழிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

இபிஎஸ் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்குதல்.. திமுக கண்டனம்!

எழிலன் - எடப்பாடி பழனிசாமி

Updated On: 

25 Aug 2025 13:15 PM

சென்னை, ஆகஸ்ட் 25: திருச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது அதிமுக தொண்டர்களால் ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை திமுக மருத்துவர் அணி செயலாளர் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான எழிலன் கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் மூலம் வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதாக மேடையில் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் இனிமேல் கூட்டத்திற்குள் ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டி வரும் நபரை நோயாளியாக செல்வார் என பயமுறுத்தும் நடவடிக்கையை பொறுப்பில்லாமல் செய்தார். அவர் பொதுவெளியில் இப்படி சொன்ன காரணத்தினால் நேற்று  திருச்சி மாவட்டம் துறையூரில் 108 என்ற ஆம்புலன்ஸ் எண்ணிற்கு அவசர அழைப்பு வந்துள்ளது.

அதில் ஒரு பெண் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு வந்த ஒருவர் மயக்கமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேப் மூலம் இடம் கண்டறியப்பட்டு அருகில் துறையூர் தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளது. அந்த நேரம் எடப்பாடி பழனிசாமி கூட்டம் தொடங்கப்படவில்லை. ஆனால் ஆளில்லாமல் ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதனை தடுத்து நிறுத்தி ஓட்டுநரின் அடையாள அட்டையை பறித்து அவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Also Read:  திமுக என்றாலே ஊழல்தான்! அது கார்ப்ரேட் கம்பேனி.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

அதேசமயம் வண்டியின் பின்புறத்தில் அமர்ந்திருந்த மருத்துவர் ஹேமலதாவின் பேட்ச் மற்றும் அவர் அணிந்திருந்த ஓவர் கோட் அதனை பரித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஹேமலதா ஏழு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவில்லை. தசவ காலத்திலும் மக்களுக்கு அவசர உதவி செய்ய வேண்டும் என சென்றவருக்கு இப்படி நடந்து விட்டது. ஆம்புலன்ஸில் வந்த இரு ஊழியர்களும் தாக்கப்பட்ட உடன் போலீஸ் வந்து வாகனத்தை திரும்ப எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது என்ன நியாயம் எனவும் எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார் எவ்வளவு பெரிய கூட்டம் வந்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் வழி விடுவது தான் இதுவரை கடைபிடிக்கப்பட்ட மாண்பாக இருந்து வந்தது அரசியல் வரலாற்றில் 108 ஆம்புலன்ஸ் போட்டு நிறைய பார்த்து நீ தவறானவன் என எடப்பாடி பழனிச்சாமி கைகாட்டி பேசியதன் தாக்கம் அடுத்த கூட்டத்திலேயே எதிரொலித்துள்ளது” எனவும் எழிலன் விமர்சித்துள்ளார்.

Also Read: அதிமுக – பாஜக கூட்டணி..! தன்னால் எந்த ஒரு கருத்தை கூற முடியாது.. அண்ணாமலை பளீச் பதில்!

நடந்தது என்ன?

கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி வேலூரில் உள்ள அணைக்கட்டு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது கூட்டத்திற்குள் ஆளில்லாத ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனைக் கண்டு கடும் கோபம் அடைந்த அவர் இது போன்று தான் பங்கேற்கும் நிகழ்வுகளில் ஆளில்லாத ஆம்புலன்ஸ்களை வரவழைத்து திமுக தொல்லை கொடுக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும் அடுத்த முறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டி வரும் நபர் நோயாளியாக செல்வார் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள அவர் நேற்று துறையூர், மணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளில் பரப்பரை மேற்கொண்டார்.  இதில் மணச்சநல்லூர் பகுதிக்கு அவர் வருவதற்கு முன்பு இந்த ஆம்புலன்ஸ் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.