இன்று பிரசாரத்தை தொடங்கும் திமுக.. தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

DMK begins its election campaign today: திமுக கடந்த மாதம் 20ஆம் தேதி, கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 'தமிழ்நாடு பணியாது' என்ற தலைப்பில் பிப்ரவரி 1ஆம் தேதி (அதாவது இன்று) முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று பிரசாரத்தை தொடங்கும் திமுக.. தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On: 

01 Feb 2026 10:27 AM

 IST

சென்னை, பிப்ரவரி 01: தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஆளும் திமுக இன்று (பிப்ரவரி 1) தனது பிரசாரத்தை தொடங்குகிறது. பிற கட்சிகளும் பிரசாரப் பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு தனது 17வது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகக்கூடும். தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க : தவெக தேர்தல் பிரசார சட்ட பாதுகாப்பு குழு…34 பேர் கொண்ட டீமை இறக்கிய விஜய்!

‘தமிழ்நாடு பணியாது’ என்ற தலைப்பில் பிரச்சாரம்:

அந்தவகையில், ஆளும் திமுக அரசு தனது இளைஞர் மற்றும் மகளிர் அணிகள் மூலம் மண்டல மாநாடுகளை நடத்தி, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக கடந்த மாதம் 20ஆம் தேதி, கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘தமிழ்நாடு பணியாது’ என்ற தலைப்பில் பிப்ரவரி 1ஆம் தேதி (அதாவது இன்று) முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20 நட்சத்திர பேச்சாளர்கள்:

இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோவிந்த செழியன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி.க்கள் திருச்சி சிவா, எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 20 நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலை திமுக தலைமை அறிவித்தது. இவர்கள் இன்று முதல் பிரச்சாரக் களத்தில் இறங்குகின்றனர். இது தொடர்பாக, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, மற்றும் எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

இதையும் படிக்க : மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

திமுக மீதான குற்றச்சாட்டுகளை முறியடிப்போம்:

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களின் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்காக தாங்கள் செயல்படுத்திய திட்டங்களை விரிவாக எடுத்துக்கூறி, திமுக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் இந்தப் பிரச்சாரத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். மக்களை நேரடியாகச் சந்திப்பது மட்டுமின்றி, திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்யவுள்ளனர். இன்று தொடங்கும் திமுகவின் ‘தமிழ்நாடு பணியாது’ பிரச்சாரம் இந்த மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் யார் தலைமை பொறுப்பை ஏற்பார்?
அஜித் பவாரின் விமான விபத்துக்கு முன் விமானி அனுப்பிய குட் மார்னிஹ் மெசேஜ் - நெகிழ்ச்சி சம்பவம்
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் - இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி
இந்த ஜப்பானின் கருப்பு முட்டையை சாப்பிட்டால் ஆயுள் 7 ஆண்டுகள் அதிகரிக்குமா?