தித்வா புயல் – 60 கி.மீ வேகத்தில் வீசும் காற்று.. ராமேஸ்வரத்தில் ரயில் சேவையில் மாற்றம்

Train Services Update: தித்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தித்வா புயல் - 60 கி.மீ வேகத்தில் வீசும் காற்று.. ராமேஸ்வரத்தில் ரயில் சேவையில் மாற்றம்

மாதிரி புகைப்படம

Published: 

28 Nov 2025 20:41 PM

 IST

சென்னை, நவம்பர் 28: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடல்பகுதி அருகே உருவான தித்வா (Ditwah) புயல், தமிழகத்தை நோக்கி 4 கி.மீ வேகத்தில் நகர்வதாக கூறப்படுகிறது. இதன் தாக்க காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடற்கரைப் பகுதிகளில் கடுமையான காற்று வீசி வருகிறது. அங்கு மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் கடல் மிகவும கொந்தளிப்புடன் காட்சியளிக்கிறது. கடற்கரையில் அலைகளின் சீற்றம் அதிகரிக்து காணப்படுகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயில்கள் மண்படம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

ரயில் சேவையில் மாற்றம்

  • தித்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் ஓகா ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் நவம்பர் 28, 2025 அன்று இன்று மதுரையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சேது அதிவேக ரயில் நவம்பர் 29, 2025 அன்று மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.
  • திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரிதா எக்ஸ்பிரஸ் நவம்பர் 29, 2025 நாளை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதி கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!!

நாளையும் ரயில்களில் மாற்றம்

  •  சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16752) நவம்பர் 29, 2025 நாளை ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.
  • கன்னியாகுமரி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22621) நவம்பர் 29, 2025 நாளை ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.
  • தாம்பரம் எக்ஸ்பிரஸ் நாளை ராமேஸ்வரத்துக்கு பதிலா மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.
  • திருச்சி எக்ஸ்பிரஸ் (16850) நவம்பர் 29, 2025 அன்று ராமேஸ்வரத்துக்கு பதிலாக மானமதுரையில் இருந்து புறப்படும்.
    மதுரை பயணிகள் ரயில் இராமேஸ்வரத்துக்கு பதிலாக உச்சிபுளியில் இருந்து புறப்படும்
  • புவனேஸ்வர்  – ராமேஸ்வரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மண்டபத்திலேயே நிறுத்தப்படும்.

இதையும் படிக்க : தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை.. வெதர்மேன் வானிலை அலர்ட்!

கனமழை காரணமாக ராமேஸ்வரம் நோக்கிய பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் குறையும் வரை ரயில் சேவைகள் மாற்றம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழப்பங்களை தவிர்க்க, பயணிகள் தங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு மற்றும் பயண விவரங்களை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தித்வா புயலால் இலங்கையில் பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. இதுவரை அங்கே வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 84 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!