Sivakasi Firecracker Factory: சிவகாசி பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடிவிபத்து.. இதுவரை 3 பேர் பலி, 3 பேர் காயம்!

Deadly Sivakasi Explosion: சிவகாசி அருகே நாராயணபுரத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் ஜூலை 21, 2025 அன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்து, மூன்று பேர் காயமடைந்தனர். பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட இந்த விபத்தில், வெடிக்கும் பட்டாசுகளின் சத்தம் பல கிலோமீட்டர் தூரம் கேட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

Sivakasi Firecracker Factory: சிவகாசி பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடிவிபத்து.. இதுவரை 3 பேர் பலி, 3 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து

Published: 

21 Jul 2025 19:04 PM

சிவகாசி, ஜூலை 21: தமிழ்நாட்டின் சிவகாசி (Sivakasi) அருகே நாராயணபுரத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் இன்று அதாவது 2025 ஜூலை 21ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் (Firecracker Factory) குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டியாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து (Sivakasi Crackers Accident) சிதற தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய இளைஞர்.. காதலி காவல் நிலையத்தில் புகார்!

வெடிப்புக்கான காரணம் என்ன..?


வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வெடிக்கும் பட்டாசுகளின் சத்தம் பல 100 மீட்டர் தூரத்திற்கு எதிரொலித்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து சென்று வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

உள்ளூர் அறிக்கைகளின்படி, இந்த துயரமான வெடிப்பில் 2 பெண் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பல படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பட்டாசு தலைநகரம்:


இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என்று அழைக்கப்படும் சிவகாசி, தீப்பெட்டி தொழில் மற்றும் அச்சிடுதலுக்கான முக்கிய மையமாகவும் உள்ளது. விருதுநகரில் உள்ள தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்து நடந்து வருகிறது. இதை தடுத்த தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ALSO READ: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுங்க..!

2025 ஜூலை 1ம் தேதி நடந்த கொடூரம்:

2025 ஜூலை 1ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தானது விருதுநகர் மாவட்டத்தின் சின்ன காமன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி நிலையத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தால் தொழிற்சாலைக்குள் இருந்து தொடர்ந்து பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.