Cyclone Montha: வங்கக் கடலில் உருவானது மோன்தா புயல்..
Tamilnadu weather today: வங்கக் கடலில் மோன்தா புயல் உருவான நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு சென்னையில் கனமழை இருக்காது என்பதும் தெரியவந்துள்ளது. இன்று நாள் முழுவதும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஆந்திராவை ஒட்டியுள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 27: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு 600 கி.மீ தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு 680கி.மீ தொலைவிலும், தெற்கு தென்கிழக்கிலும் விசாகப்பட்டினத்திற்கு 710கி.மீ தொலைவிலும், அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 790 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த மோன்தா புயலானது மணிக்கு 16கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் இன்று கனமழை பெய்யுமா?




சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கனமழையை சென்னை தவறவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். அதோடு, மோன்தா புயல் காரணமாக ஒட்டுமொத்தமாக சென்னையில் மிதமான மழையே பெய்யும் என்றும் குளிர்ந்த சீதோசன நிலை காணப்படும் என்றும் கணித்துள்ளார். அதிலும், தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்சென்னையை காட்டிலும் வட சென்னையில் அதிகளவில் 50-70மிமீ மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவித்துள்ளார்.
Also read: ‘எதிரியா இருக்க தகுதி வேணும்’ அஜித் வசனத்தைச் சொல்லி விஜய்யை விமர்சித்த சீமான்!
குறிப்பாக ஆந்திர பகுதிகளை ஒட்டிய கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும், இதன் தாக்கமாக வடசென்னையில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவித்துள்ளார். காலையில் பெய்யத் தொடங்கும் மழையானது நாள் முழுவதும் மிதமான அளவில் பெய்வதுடன், அவ்வப்போது கடுமையான வெடிப்புகளும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, செவ்வாய்க்கிழமை காலைக்குள் மழை நின்றுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை இருக்காது:
அதனால், விடுமுறை கிடைக்கும் என காத்திருக்காமல் பள்ளிக்கு தயாராகி கிளம்பிச் செல்லும்படியும், மழை பெய்தாலும் அவை சமாளிக்கும் வகையிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்ட ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 11.5 செ.மீ முதல் அதிகபட்சமாக 20.4 செ.மீ வரை மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also read: விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது: ராஜேந்திர பாலாஜி
இந்த மோன்தா புயலானது, நாளை (அக்.28) அன்று இது தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா கடலோர பகுதிகள் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே அன்று இரவு கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.