குற்றால சாரல் திருவிழா.. வில்லுப்பாட்டு, ஆணழகன் போட்டி, நாய் கண்காட்சி.. நிகழ்ச்சி நிரல் இதோ..
Courtallam Saral Festival: குற்றால சீசனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். ஜூலை 20, 2025 தேதியான இன்று முதல் குற்றால சாரல் திருவிழாவானது வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான ஜூலை 20 2025 அன்று கொழு கொழு குழந்தைகள் போட்டி, சிலம்பம், கேரளா கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், மெல்லிசைக் கச்சேரி நடக்க உள்ளது.

கோப்பு புகைப்படம்
குற்றால சாரல் விழா, ஜூலை 20, 2025: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூலை 20 2025 தேதியான இன்று குற்றால சாரல் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது. இந்த திருவிழாவானது அடுத்த ஏழு நாட்களுக்கு அதாவது 2025 ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், சுற்றுலா பயணிகளுக்கான வித்தியாசமான நிகழ்ச்சிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே மாதம் தொடங்கியது முதலே தென்காசியில் இருக்கக்கூடிய குற்றால அருவிகளில் சீசன் தொடங்கியது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் கலைக்கட்டி இருக்கும். குற்றாலத்தில் இருக்கும் ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி, செண்பக அருவி என அனைத்து அருவிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொழு கொழு குழந்தைகள் போட்டி:
அந்த வகையில் இந்த ஆண்டும் குற்றால சீசனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். ஜூலை 20, 2025 தேதியான இன்று முதல் குற்றால சாரல் திருவிழாவானது வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான ஜூலை 20 225 அன்று கொழு கொழு குழந்தைகள் போட்டி, சிலம்பம், கேரளா கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், மெல்லிசைக் கச்சேரி நடக்க உள்ளது. இரண்டாம் நாளான 2025 ஜூலை 21ஆம் தேதி யோகா போட்டி, நாட்டிய நாடகம், கைச்சிலம்பாட்டம் நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, தோல்பாவை கூத்து, ஜக்லின் நிகழ்ச்சி மற்றும் புகைப்படம், மெல்லிசை கிராமிய பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பள்ளி மணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள்:
சாரல் திருவிழா!!
போட்டிகள்,#TenkasiDistrict #saralthiruvizha #saralvizha #courtallam pic.twitter.com/92VG8fEsW0— District Collector Tenkasi (@CollrTenkasi) July 19, 2025
2025 ஜூலை 23ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, திருநங்கைகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி, கனியான் கூத்து, பரதநாட்டியம், கர்நாடகா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் குரல் இசை மற்றும் மெல்லிசை கச்சேரிகள் நடக்க உள்ளது. 2025 ஜூலை 24 அன்று ரங்கோலி போட்டி, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பல் சுவை நிகழ்ச்சி, மள்ளர் கம்பம் மற்றும் திரைப்படம் மெல்லிசை கச்சேரி நடக்க உள்ளது.
மேலும் படிக்க: 3-வது முறை நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆணழகன் போட்டி:
2025 ஜூலை 25 அன்று அடுப்பில்லாமல் சமைத்தல் மற்றும் சிறுதானிய உணவு போட்டி, நையாண்டி மேளம், கரகாட்டம், கிளாரினெட் இசை நிகழ்ச்சி, தப்பாட்டம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, தெம்மாங்கு நிகழ்ச்சி, தேவராட்டம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து 2025 ஜூலை 26 ஆம் தேதி பலுதூக்குதல் போட்டி, வலுதூக்குதல், ஆணழகன் போட்டி, மகாராஷ்டிரா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சி, ஜிம்லா மேளம் மற்றும் மெல்லிசை கச்சேரி நடக்கிறது.
கடைசி நாளான ஜூலை 27 2025 அன்று நாய் கண்காட்சி, நடனம் மற்றும் நாடகம், கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, மானாட்டம் மற்றும் மயிலாட்டம், மகாராஷ்டிரா கலைஞர்களின் கலை நிகழ்ச்சி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை கச்சேரி நிறைவு விழா நடைபெறுகிறது