விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை… மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் – நீதிபதி காட்டம்

Court Slams Vijay: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பான பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என கருத்து தெரிவித்தார்.

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை... மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதி காட்டம்

விஜய்

Published: 

03 Oct 2025 16:39 PM

 IST

கரூரில் (Karur) கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் இது தொடர்பான பொது நல மனு  அக்டோபர் 3, 2025 அன்று விசாரணைக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் அதனை விசாரித்தார். அப்போது பேசிய அவர் தமிழக அரசிடம் அதிரடி கேள்விகளை எழுப்பினார். பொது நல வழக்கு தாக்கல் செய்தவர் விஜய் (Vijay) மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் எனவும், அதற்கான உத்தரவை தான் பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.  அதன் ஒரு பகுதியாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுவது ஏன் எனவும் நீதிபதி செந்தில் குமார் கேள்வி எழுப்பினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்

இது தொடர்பாக பேசிய நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது. அனைத்து கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்திய கட்சியினர் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கரூர் துயர சம்பவத்திற்கு நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம், அரசு அமைதியாக இருக்க முடியாது என்றார்.

இதையும் படிக்க : ‘விஜய் கைது செய்யப்படுவார்’ எப்போது? திமுக சொன்ன பரபரப்பு பதில்!

விஜய்க்கு தலைமை பண்பு இல்லை

மேலும் பேசிய அவர், தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் வெளியேறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்துவிட்டார். அவருக்கு தலைமை பண்பே இல்லை என்று காட்டமாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் தலைவர் வெளியேறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் தலைவர் என்பதை  மொத்தமாக மறந்துவிட்டார். அவருக்கு தலைமை பண்பே இல்லை என்று காட்டமாக குறிப்பிட்டார். மேலும் விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்றார்.

இதையும் படிக்க : ’விஜயின் இதயத்தில் வலியே இல்ல.. சினிமா வசனம் பேசுறாரு’ சீமான் பளீச்!

மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களே? கரூர் நெரிசல் விவகாரத்தில் சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இவ்வளவு தாமதம்? எனவும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் நீதிபதியின் கேள்விகள் குறித்து தவெகவினர் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.