கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
Karur Stampede Case in Chennai High Court | கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் பாஜக கவுன்சிலர் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை, அக்டோபர் 03 : கரூர் கூட்ட நெரிசல் (Karur Stampede) விவகாரத்தில் சிபிஐ (CBI – Central Bureau of Investigation) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி பாஜகவை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனு குறித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கரூர் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 28, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். இந்த பரப்புரையில், தவெக தலைவர் விஜய் வாகனத்தின் மீது நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழைந்தைகள் என மொத்தம் 41 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : RSS அமைப்பினர் கைது.. பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!
சிபிஐ விசாரணை கோரிய பாஜக கவுன்சிலர் – நீதிமன்றம் மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ-க்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைம் வைத்து வந்தனர். அந்த வகையில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இந்த வழக்கை சிபிஐ மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவை அவசர வழக்காக ஏற்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : விஜய்க்கு சப்போர்ட்.. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் சொன்ன முக்கிய மேட்டர்!
சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள்
இதேபோல கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர் பாதிகப்பட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் விசாரணையை மாற்றலாம், விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என எப்படி கேட்க முடியும் என கூறியுள்ள நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் சிபிஐ விசாரணை கோரிய மணுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி பாஜக கவுன்சிலர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.