ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார்.. சென்னையில் நூதன மோசடியில் ஈடுபட்ட தம்பதி..

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரபல தணியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். கடன் பெற்று வாங்கிய அந்த சொகுசு காருக்கு முதல் 6 மாதம் சரியாக மாத தவணையை கட்டி வந்துள்ளனர். அதன்பின், தவணை கட்டாமல் இருந்தது வந்துள்ளனர்.

ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார்.. சென்னையில் நூதன மோசடியில் ஈடுபட்ட தம்பதி..

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

12 Feb 2026 11:15 AM

 IST

சென்னை, பிப்ரவரி 12: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் கடன் பெற்று கார் வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடிகள் பலவிதம், இதில் கடன் பெற்று கார் வாங்கி அதன் மூலம் நடத்திய மோசடி இன்னும் புதுவிதமாக உள்ளது. அதுவும், கணவனும், மனைவியும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அப்படி அவர்கள் என்ன மோசடி செய்தார்கள், எப்படி செய்தார்கள், அவர்களது மோசடிக்கு யாரெல்லாம் உடைந்தயாக இருந்தார்கள் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: பகலில் IT வேலை, சொகுசு வாழ்க்கை.. இரவில் வீடு வீடாக திருட்டு.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி!!

கடன் வாங்கி சொகுசு கார் வாங்கிய தம்பதி:

நாம் ஒவ்வொருவருக்கும் கார் வாங்க வேண்டும் என்பது கண்டிப்பாக லட்சியமாக இருக்கும். அதுவும், அப்படி வாங்கும் அந்த கார் சொகுசு காராக இருந்தால், கூடுதல் மகிழ்ச்சியே. அப்படி, தான் ஒரு தம்பதி சொகுசு காரை வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது. சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் – திருநின்றவூர் சாலையை சேர்ந்தவர் லோகேஷ் என்கிற கிஷோர் (34). அதிமுக பிரமுகர் ஆவார். இவரது மனைவி திவ்யா (32). இவர்கள், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரபல தணியார் நிதி நிறுவனத்தில் ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

6 மாதம் மட்டுமே தவணை செலுத்திய தம்பதி:

கடன் பெற்று வாங்கிய அந்த சொகுசு காருக்கு முதல் 6 மாதம் சரியாக மாத தவணையை கட்டி வந்துள்ளனர். அதன்பின், தவணை கட்டாமல் இருந்தது வந்துள்ளனர். எனினும், உடனடியாக இது நிதி நிறுவனத்தின் கவனத்திற்கு செல்லவில்லை. சிறிது மாதம் கழித்து, கிஷோர் கணக்கிலான தவணைத்தொகை சில மாதங்களாக வராததை அறிந்த நிதி நிறுவனம், இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, காருக்கான கடன் அடைக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கடனை அடைத்ததாக மோசடி:

அதன்படி விசாரித்ததில், சம்மந்தப்பட்ட அதே நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் குரோம்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் மற்றும் திரிசூலத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் உதவியுடன் கிஷோர் – திவ்யா தம்பதி நிதி நிறுவனத்தில் தாங்கள் வாங்கிய முழு கடனையும் அடைத்துவிட்டது போல, போலியான சான்றிதழை தயார் செய்துள்ளனர். அதோடு நிற்காமல் இந்த சான்றை காட்டி, தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தங்களது காருக்கு எந்த கடனும் இல்லை என NOCயும் பெற்றுள்ளனர்.

காரை அடமானம் வைத்து கடன் பெற்று மோசடி:

இதோடு, இந்த மோசடி சம்பவம் முடியவில்லை. தங்களது காருக்கு எந்த கடனும் இல்லை என்ற NOCயை பெற்றதும், அதை பயன்படுத்தி மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் காரை அடமானம் வைத்து ரூ.14 லட்சம் பெற்றதும் தெரியவந்துள்ளது.  இதையடுத்து, நடந்த மோசடி சம்பவம் குறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் ரவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

போலீசார் வலைவீச்சு:

இந்த புகாரின் பேரில், அதிமுக பிரமுகர் கிஷோரை கைது செய்தனர். தொடர்ந்து, மோசடியில் தொடர்புடைய கிஷோரின் மனைவி திவ்யா, தனியார் நிதி நிறுவன ஊழியர்களான மற்றும் இருவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. போலீசார் அவர்கள் மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

சக்திவாய்ந்த கப்பல்களை அசால்டாக எதிர்கொள்ளும் ஈரான் - காரணம் என்ன?
ஜன நாயகன் பட சென்சார் விவகாரம் – வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!
சர்வதேச பனிச் சிற்பப் போட்டியில் இந்திய அணிக்கு பதக்கம்
ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?