வைரலான வீடியோ.. பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்..  சிக்கலில் கோபி, சுதாகர்

parithabangal Youtube Video : பிரபல யூடியூபர்களான கோபி சுதாகர் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆணவக் கொலை குறித்து பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ வெளியான நிலையில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வைரலான வீடியோ.. பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்..  சிக்கலில் கோபி, சுதாகர்

கோபி - சுதாகர்

Updated On: 

07 Aug 2025 17:06 PM

 IST

சென்னை, ஆகஸ்ட் 07 :  கோபி, சுதாகரின் (Gopi Sudharkar) பரிதாபங்கள் (Parithabangal) யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக மோதல் உண்டாக்கும் வகையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ வெளியாகி பேசும் பொருளாக மாறிய நிலையில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். தன்னை அக்காவை காதலித்ததால், ஆத்திரத்தல் அவரது சகோதரர் கவினை கொலை செய்துள்ளது மாநிலத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைதானார். எனவே, ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். சாதி கட்டமைப்பை உடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். கவினின் ஆணவக் கொலை மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படியான சூழலில், பிரபல யூடியூபர்களான கோபி சுதாகர் ஆணவக் கொலை குறித்தும், சாதி கட்டமைப்பு குறித்தும் வெளியிட்ட வீடியோவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  சம காலத்தில் நடக்கும் விஷயங்கள் கேலி, கிண்டல் செய்து வீடியோ வெளியீடும் பரிதாபங்கள் யூடியூப் சேனல், சமீபத்தில்  நடந்த நெல்லை ஆணவப் படுகொலை தொடர்பாக  காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

Also Read : 7வது நாளாக போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. சாலைகளில் நிரம்பி வழியும் குப்பைகள்.. என்ன காரணம்?

கோபி – சுதாகர் மீது பறந்த புகார்

அதில்,  சாதியவாதிகளை விமர்சிக்கும் வகையில், பல கருத்துகள் இடம்பெற்றிருந்தனர். இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை கிடைத்தது.  அதே நேரத்தில், அதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.  இந்த சூழலில், கோபி, சுதாகர் மீது புகார் எழுந்துள்ளது.  சமூக மோதலை உண்டாக்கும் வகையில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாக கோபி, சுதார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் புகார் கொடுத்துள்ளார். இரு சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோபி, சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமெனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட் இதோ..

பிரபல தயாரிப்பாளர்  கண்டனம்

மேலும், பிரபல தயாரிப்பாளர் .எம்.சௌத்ரி யூடியூபர்கள் கோபி சுதாகரை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், பரிதாபங்கள் வீடியோவிற்கு கண்டனமும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “சமூக கருத்து குறித்து பேச கோபி சுதாகருக்கு உரிமை கொடுத்தது யார். சமூக பதற்றத்தை இவர்கள் உருவாகும் வகையில், பேசுகின்றனர். சுர்ஜித் கைதால் நாங்கள் சோகத்தை இருக்கிறோம். இந்த நேரத்தில் இதுபோன்று வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம்என தெரிவித்தார்.