மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

MK Stalin on Tamil Nadu Development : தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே உறுதி செய்துள்ள நிலையில், அந்த அறிக்கையை பிரதமரும் ஆளுநரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசின் அறிக்கையையே பிரதமரும் ஆளுநரும் படிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published: 

31 Jan 2026 16:15 PM

 IST

சென்னை, ஜனவரி 31 : தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே உறுதி செய்துள்ள நிலையில், அந்த அறிக்கையை பிரதமரும் ஆளுநரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு நிகழ்ச்சியாக சிவகங்கை (Sivaganga) மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே மகாத்மா காந்தி மற்றும் ஜீவா இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை நினைவுகூரும் வகையில், கட்டப்பட்ட நினைவகத்தை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் ஜீவா மற்றும் கவிஞர் முடியரசன் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சிவகங்கையில் ரூ.2,560 கோடி திட்டங்கள்

அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 15,453 பயனாளர்களுக்கு முதல்வர் வழங்கினார். அதோடு, ரூ.2,560 கோடி மதிப்பிலான 49 திட்டங்களையும் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி நாகரிகம் கண்டறியப்பட்ட மண் இது. இந்த மாவட்டத்தில் திமுக ஆட்சியின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்கள் கேட்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன என்றார்.

இதையும் படிக்க : பாமகவுக்கு வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்…கெளரவத் தலைவர் ஜி.கே.மணி!

மேலும் பேசிய அவர், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று நான் கூறுவது கற்பனைக் கணக்குகள் அல்ல. இவை அனைத்தும் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள். தமிழ்நாடு வளர்ச்சி குறித்து குற்றம்சாட்டும் ஆளுநர், அந்த அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசிடமே கேள்வி கேட்கலாம். மேலும், தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்றார்.

இதையும் படிக்க : பழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்…குவிந்து வரும் பக்தர்கள்…பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!

‘மத்திய அரசின் பொருளாதார அறிக்கையை படிக்க வேண்டும்’

மேலும், பட்ஜெட்டுக்கு முன் வெளியான மத்திய அரசின் பொருளாதார அறிக்கையில் தமிழ்நாடு பாராட்டப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோருக்கு ஆதரவு, உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு, பெண்கள் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தொழில்கள் வரவில்லை என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறுகிறார். ஆனால் மத்திய அரசின் அறிக்கையே தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக குறிப்பிட்டுள்ளது. எனவே, பிரதமரும் ஆளுநரும் தாங்கள் வெளியிட்ட அறிக்கையை முதலில் படித்துவிட்டு மேடைக்கு வந்து பேச வேண்டும் என்றார்.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ