Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போலி மருந்து விவகாரம்…முதல்வர் பதவி விலக வேண்டும்…வே.நாராயணசாமி போர்க்கொடி!

CM Should Resign Over Counterfeit Medicines: புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எ ன். ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்து உள்ளார் .

போலி மருந்து விவகாரம்…முதல்வர் பதவி விலக வேண்டும்…வே.நாராயணசாமி போர்க்கொடி!
போலி மருந்து விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Dec 2025 14:41 PM IST

இது தொடர்பாக புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் முத்திரையர்பாளையம் தொழிற்பேட்டை, திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் ராஜா என்பவர் மருந்து கட்டுப்பாட்டு துறை, தொழிலாளர் நலத்துறை, அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெறாமல் தொழிற்சாலை ஆரம்பித்து போலியாக மருந்து, மாத்திரைகள் தயார் செய்து உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் ரூ. 10 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரியும் கட்டாமல் இருந்துள்ளார்.

உண்மை மருந்தில் போலி மருந்து கலப்பு

சன் பார்மா மற்றும் ரெண்டிலா ஆகிய நிறுவனத்தின் ஏஜெண்டுகளை எடுத்து அந்த மருந்துகளுடன் இந்த போலியான மருந்துகளை கலந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மருந்தை அருந்திய பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என். ஆர். காங்கிரஸ் மற்றும் பா ஜ க ஆட்சியின் உதவியோடு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமைச்சர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!

முதல்வர்-அமைச்சர்களுக்கு தொடர்பு

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. மக்கள் உயிரோடு விளையாடும் போலி மருந்து விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.

சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்

புதுச்சேரி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டால், இந்த விவகாரம் புதுச்சேரியுடன் முடிந்து விடும். இந்த விவகாரத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சி பி ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக, புதுச்சேரி அரசை பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஏற்கெனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதனிடம் புகார் மனு அளித்துள்ளோம். ஆனால், அரசியல் தலையீட்டின் காரணமாக இந்த விவகாரத்தில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு

அது மட்டும் இன்றி சோதனை மேற்கொள்ள வரும் அதிகாரிகளை மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இந்த போலியான மருந்து தொழிற்சாலையின் காரணமாக, அரசுக்கு ரூ. 5000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல, புதுச்சேரி அரசுக்கும் கோடிக் கணக்கில் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த போலி மருந்து தயாரிப்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!