அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Fidel Castro’s Centenary Celebration : பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு. க.ஸ்டாலின், திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா இங்கே யாருக்கும் அடிமையில்லை என்று பேசியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழு மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து சென்னை (Chennai) ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், கூட்டணியில் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருந்ததில்லை. அவர்கள் பேசுவதை நானும் புறக்கணிக்கவில்லை. எங்களில் பாதி கம்யூனிஸ்ட் தான். என் பெயரே ஸ்டாலின் தான் என்றார். மேலும் நட்ப மனப்பாங்கோடு கூறப்படும் விமர்சனம் மற்றும் உள்நோக்கத்துடன் கூறப்படும் தவறான குற்றச்சாட்டு எது என்பதைத் தங்களுக்குத் தெளிவாக தெரியும். கொள்கை தெளிவும் நட்பு புரிதலும் கொண்டவர்களாக நாங்கள் இருப்பதற்கு இந்த நிகழ்ச்சி மேடையை சான்று என்றும் தெரிவித்தார்.
மேலும் கம்யூனிஸ்டுகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா இங்கே யாருக்கும் அடிமையில்லை. கம்யூனிஸ்டுகள் குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் கூட்டணி அல்ல. அது கொள்கை கூட்டணி என்றார்.
இதையும் படிக்க : தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவர் புகழ் வாழ்க என்று வாழ்த்துகிறேன். ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர்கொள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தோழமையுடன் எந்நாளும் இருப்போம்.
– மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #DMK4TN pic.twitter.com/0qnYZvQQ5T
— DMK (@arivalayam) August 12, 2025
கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சமீபத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக விழுங்கி வருகிறது. தேர்தலுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விடும் என்றார்.
இதையும் படிக்க : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து விசிகவினர் பேசக்கூடாது – நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்..
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிசாமி நிரந்தர கொள்கை அற்றவர். பத்து நாட்களுக்கு ஒருமுறை தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிட்டது என்று கூறியவர், அதற்குப் பிறந்த நாளே எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் நாங்கள் அதனைத் தெளிவாக நிராகரித்தோம். அதற்கு அடுத்த நாளே கோபம் வந்து, கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று பேசினார்.