சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு அதிரடி!
santhakulam Van Accident : சாத்தான்குளத்தில் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றில் வாகனம் விழுந்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவிட்டுள்ளார். அதாவது, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யவும், சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள், பள்ளங்கள் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்யம் உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் வேன் விபத்து
தூத்துக்குடி, மே 18 : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஆம்னி வேன்(Sathankulam omni van accident) விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரம் இருந்த கிணற்றில் விழுந்ததை அடுத்து, 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தேவாலய நிகழ்விற்காக 8 பேர் தங்களது சொந்த ஆம்னி வேனில் கோவையில் இருந்து சென்றிருக்கின்றனர். இந்த ஆம்னி வேன் 2025 மே 17ஆம் தேதி மாலை மீரான்குளம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து
அப்போது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது. 50 அடி ஆழத்தில் விழுந்துள்ளது. இந்த கிணறு சாலைக்கு 20 மீட்டர் தொலைவில் இருந்துள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், கிணற்றுக்குள் மூழ்கியது. இதில் இருநத மூன்று பேர் பாதுகாப்பாக வெளியே வந்தனர்.
மற்ற 5 பேர் கிணற்றுக்குள் சிக்கித் தவித்து வந்துள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாலையில் இருந்து இரவு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தது. இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்த நிலையில், 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
இதனை அடுத்து, 5 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து, கிணற்றுக்குள் இருந்த வேனை, கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் வசந்தா, மோசஸ், ரவி, ஒன்றைய வயது குழந்தை கென்சி கிருபா, ஷாலினி ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்திற்கு உள்ளூர் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து அதனை சுற்றி சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
சாலைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர்கள் உத்தரவிட்டார். சாத்தான்குளத்தில் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றில் வாகனம் விழுந்து விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து,