AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று கூடும் முதல் அமைச்சரவை கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன ?

தற்போது புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ளார். தமிழக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று கூடும் முதல் அமைச்சரவை கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jun 2026 08:12 AM IST

ஜூன் 5, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், புதிதாக தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றது. இதில் முக்கியமாக, அமைச்சரவையில் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மே 10ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து பல நாட்கள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் 23 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

முதலமைச்சர் தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டம்:

இந்த சூழலில், தற்போது புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ளார். தமிழக அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள், குறிப்பாக பட்ஜெட் தயாரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: டாஸ்மாக் பார் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை.. தப்பியோடிய நண்பர்களுக்கு வலைவீச்சு.. நெல்லையில் பயங்கரம்!

பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை:

ஏனெனில், தேர்தல் சமயத்தில் முதலமைச்சர் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். குறிப்பாக, 200 யூனிட் இலவச மின்சாரம், குறுவை விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த சூழலில், இந்த திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்துவரும் சூழலில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை முதலமைச்சர் விஜய் அழைத்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள், லஞ்சத்தை ஒழிக்க புதிய ‘ஒற்றைச் சாளர முறை’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட் நியூஸ்!!

அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us