‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னையில் இன்று நடக்கும் முகாம்.. விவரம் உள்ளே..

Stalin's ungaludan stalin scheme: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் குறைதீர்வு திட்டமாகும், இத்திட்டத்தின் மூலம் மக்கள் நேரில் புகார்களை தெரிவித்துத் தீர்வு பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் இன்று 2025 ஜூலை 18 திட்டம் முகாம் 6 வார்டுகளில் நடக்கிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: சென்னையில் இன்று நடக்கும் முகாம்.. விவரம் உள்ளே..

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்

Published: 

18 Jul 2025 07:48 AM

சென்னை ஜூலை 18: தமிழக அரசின் (Tamilnadu Government) மக்கள் குறை தீர்க்கும் திட்டமாக செயல்பட்டு வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் (Ungaludan Stalin Scheme) கீழ், இன்று 2025 ஜூலை 18 வெள்ளிக்கிழமை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளில் சிறப்பு முகாம்கள் (Special camps in 6 wards) நடைபெறுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், புகார்கள், குறைகள் தொடர்பாக நேரடியாக புகார் அளித்து தீர்வு பெறலாம். ஆறு இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சி (Chennai Corporation) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்க்கும் நோக்கில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், இன்று 2025 ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) நான்கு மண்டலங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரம்

முகாம்கள் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு: மணலி மண்டலத்தில், மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெறும். தண்டையார்பேட்டை மண்டலத்தில், ஆர்.வி. நகர் குருமூர்த்தி பள்ளியில் முகாம் நடைபெறும். திருவிக்க நகர் மண்டலத்தில், சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை மண்டலத்தில், சூசைபுரம் பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர் தேவாலய வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில், மதுரவாயல் பகுதியிலுள்ள ஸ்ரீ பாக்யலட்சுமி திருமண மண்டபம் முகாம் இடமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில், முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சனில் உள்ள சமூக நலக் கூடம் வாயிலாக முகாம் நடைபெற உள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் நேரில் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also Read: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வெதர் அப்டேட்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் – ஒரு பார்வை

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்பது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிய மக்கள் குறைதீர்வு மற்றும் நலத்திட்ட விழிப்புணர்வு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை மக்களுக்கு நேரடியாக விளக்கி, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், புகார்கள், கோரிக்கைகள் போன்றவற்றை நேரில் கேட்டு, அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்கும் முயற்சியாக செயல்படுகிறது. மக்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல்வர் நேரில் மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்குகிறார். முதல்வர் நேரில் செல்லாத மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம் அல்லது மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.