சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட்ல தெரியமா? நோட் பண்ணுங்க!

Chennai EMU Train Cancelled : சென்னையில் இரண்டு நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு சிரமத்தை போக்கும் வகையில், அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட்ல தெரியமா? நோட் பண்ணுங்க!

சென்னை மின்சார ரயில்

Published: 

24 May 2025 07:13 AM

சென்னை, மே 24 : சென்னையில் இரு நாட்களுக்கு 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. புறநகரையும் இணைக்கக் கூடிய வகையில் இருப்பதால், சென்ன மக்களின் பெரிதும் மின்சார ரயில்களை பயன்படுத்து வருகின்றனர். இந்த மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தான் ஏறும் இடத்தில் இருந்து எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல், சுலபமாக சென்று வருகின்றனர். பயணிகளுக்கு சீரான பயண அனுபவத்தை வழங்குவதற்கு, அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின்போது, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

சென்னையில் மின்சார  ரயில்கள் ரத்து

அந்த வகையில்,  தற்போது பராமரிப்பு பணிகளுக்காக 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.  அதன்படி, கவரைப்பேட்டை – பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே 2025 மே 24ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இரு நாட்களிலும், மதியம் 12 மணி முதல் மாலை 5.10 மணி வரை 4 மணி நேரத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுமார் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, 2025 மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் காலை 5:40, காலை 10.15 மற்றும் மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மூர் மார்க்கெட் – சுள்ளூர்பேட்டை மெமு ரயில்களும், காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் சூள்ளூர்பேட்டை – நெல்லூர் மெமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எந்தெந்த வழித்தடத்தில்?


2025 மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் காலை 10:30, 11:35 மற்றும் மதியம் 1.40 மணிக்கு மூர் மார்க்கெட் – கும்மிடிபூண்டி மின்சார ரயில்களும், அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ஆவடி – மூர் மார்க்கெட் மின்சார ரயிலும், பிற்பகல் 12.40 மற்றும் 2.40 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை – கும்மிடிப்பூண்டி ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி ரயிலும், பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இயக்கப்படும் ரயில்களும் கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மூர் மார்க்கெட்டில் இருந்து பொன்னேரி மற்றும் மீஞ்சூர், கடற்கரையிலிருந்து பொன்னேரி, பொன்னேரியிலிருந்து மூர் மார்க்கெட், மீஞ்சூர்- மூர் மார்க்கெட் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.