குஷியில் மாணவர்கள்.. பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை..
சென்னையில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், அன்றைய தினம் சென்னை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 13, 2026: தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்க உள்ள சூழலில், கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்வுகள் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய உள்ளன. இதனைத் தொடர்ந்து, கோடை விடுமுறை ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். தேர்தல் நடைபெற இருப்பதன் காரணமாக, பொதுத்தேர்வுகள் மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, விடுமுறையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் கொடூரம்.. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியையை வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்..
இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை:
கோடை விடுமுறை தொடங்க இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பே இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், அன்றைய தினம் சென்னை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் தபால் வாக்குப்பதிவு.. ஏப்ரல் 16, 17 மற்றும் 18 நடக்கும் என அறிவிப்பு..
ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அதன்படி, ஏப்ரல் 16ஆம் தேதி மட்டும் பள்ளிகள் செயல்படும். அதன் பின்னர் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.