தமிழகத்தில் இரு நாள்கள் மழை…சூறைக்காற்று வீச வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை!

Two Days Rain In Tamil Nadu: தமிழகத்தில் இரு நாள்கள் மழை பெய்யும் என்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழகத்தில் இரு நாள்கள் மழை...சூறைக்காற்று வீச வாய்ப்பு...வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இரு நாள்கள் மழை

Updated On: 

20 Dec 2025 14:51 PM

 IST

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்தது. ஆனால், கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டமாகவும், பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இரு நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

தமிழகத்தில் இரு நாள்கள் மழை

வரும் டிசம்பர் 22- ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. இதே போல, டிசம்பர் 25 மற்றும் 26- ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: நடுங்க வைக்கும் குளிர்.. மழைக்கு வாய்ப்பு இருக்கா? என்ன சொல்கிறது வானிலை மையம்?

குறைந்தபட்ச வெப்பநிலை- உறைபனி

இந்த நிலையில், இன்று சனிக்கிழமை (டிசம்பர் 20) முதல் டிசம்பர் 24- ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கும். இன்று மற்றும் நாளை நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு அல்லது அதிகாலை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளில்…

சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன், அதிகாலையில் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். நாளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான பணி மூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸுகாக இருக்கும்.

சூறைக்காற்று வீச வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி ஆகியவற்றின் இன்று முதல் டிசம்பர் 22- ஆம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை சூறாவளிக்காற்று வீச கூடும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘வாட்டி வதைக்கும் குளிர்’.. காலையிலேயே இப்படியா!!.. அடுத்த 4 நாட்களுக்கு இப்படிதான்!!

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்