Actor Srikanth: பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தார்கள்.. நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்!

Chennai Kollywood Drug Case: சென்னை நுங்கம்பாக்கம் போலீசார், நடிகர் ஸ்ரீகாந்தை போதைப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து கொக்கைன் வாங்கியதாகவும், படத்திற்கான பணம் கேட்டபோது கொக்கைன் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Actor Srikanth: பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தார்கள்.. நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்!

நடிகர் ஸ்ரீகாந்த்

Published: 

24 Jun 2025 15:05 PM

 IST

சென்னை, ஜூன் 24: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று அதாவது 2025 ஜூன் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை (Actor Srikanth) கைது செய்தனர். இதையடுத்து, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் (Drug Case) கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத்தின் நண்பர் பிரதீப் இதுகுறித்து அளித்த வாக்குமூலத்தில் கோலிவுட் திரையுலகத்தை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் பெயரை வெளியிட்டதாக தகவல் வெளியாகியது. இதில், நடிகர் ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட சோதனையின் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம்:

நீதிமன்ற காவலில் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், “அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான், அவரிடம் இருந்து சுமார் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை அதாவது 2025 ஜூன் 20ம் தேதி இரவு எனது நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்தை மட்டுமே எனக்கு தெரியும். அவர் இதற்குமுன்பு, என்னை வைத்து படம் தயாரித்துள்ளார்.

படத்திற்காக எனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்தை நான், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் கேட்டப்போதுதான், கொக்கைன் கொடுத்து எனக்கு பழக வைத்தார். இப்படி, நான் பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்து பழகத்தை அதிகப்படுத்தியது பிரசாத்தான்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி..?

கடந்த 2025 ஜூன் 17ம் தேதி நுங்கம்பாக்கம் பார் ஒன்றில் நடந்த தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உட்பட சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, அவரிடம் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, கொக்கைன் என்னும் போதைப்பொருள் சப்ளை செய்ததாக முன்னாள் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அப்போது, கயானை நாட்டைச் சேர்ந்த ஜான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகமடைந்த காவல்துறையினர் ஸ்ரீகாந்துக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. அதில், ஸ்ரீகாந்த் ரூ. 4.72 லட்சத்திற்கு 40 முறை கொக்கைன் வாங்கியுள்ளார். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் வருகின்ற 2025 ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
வாக்குப்பதிவு நாளில் பேருந்துகள் நிறுத்தம் திட்டமிட்ட சதி.. தவெக நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு!
தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்.. விஜய்யின் பிளான் லீக்கானதா? சமூகவலைதளங்களில் வைரலாகும் போஸ்ட்!
2 மணி நேரம் கேமரா இணைப்பு கட்.. பின்னோக்கி சென்ற வீடியோ காட்சிகள்.. வாக்குப்பதிவு இயந்திர அறையில் பரபரப்பு!
தென்காசி போலீஸ் விசாரணைக்கு அதிருப்தி? ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வாக்கு எண்ணிக்கை அன்று ஆஸ்திரேலியா செல்லும் விஜய்? வெளியான தகவல்
வெயிலின் தாக்கத்தால் ஏசி கேட்ட மனைவி.. வாங்கி தர மறுத்த கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அதிகரிக்கும் ஈரபதத்துடன் கூடிய வெப்ப அலை - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்த ரயில் நிலையம் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. எங்கு தெரியுமா?
ஆதார் எண் இருந்தால் மட்டும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியுமா?
தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த 5 போலீஸ் அதிகாரிகள்