Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’கொள்கையில் உறுதி.. சமரசமே இல்ல’ முருக பக்தர்கள் மாநாடு.. ஆர்பி உதயகுமார் கண்டனம்!

Murugan Devotees Conference : முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட பெரியார், அண்ணா பற்றி வீடியோக்களுக்கு வன்மையாக கண்டிக்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும் அதில் எந்த சமரசமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

’கொள்கையில் உறுதி.. சமரசமே இல்ல’ முருக பக்தர்கள் மாநாடு.. ஆர்பி உதயகுமார் கண்டனம்!
ஆர்பி உதயகுமார்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Jun 2025 12:07 PM

சென்னை, ஜூன் 24 : முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோவிற்கு அதிமுக மன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (AIADMK EX Minister RB Udhayakumar) கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதும் குறித்து ஆர்.பி.உதயகுமார் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் 2025 ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் (Murugan Maanadu) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதோடு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த மாநாடில் அண்ணா மற்றும் பெரியார் குறித்து விமர்சன வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

அண்ணா, பெரியார் வீடியோ

இந்த வீடியோ பெரும் சர்ச்சையாக தற்போது வெடித்துள்ளது. அந்த வீடியோவில், பெரியார், அண்ணா, கருணாநிதி, கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை அவமதிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களும் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ  பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு அதிமுக தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ மூலம் கணன்டம் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ”முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் தான் மாநாட்டில் கலந்து கொண்டோம்.  நீதிமன்றமும் அதில் உறுதியாக தீர்ப்பு வழங்கி இருந்தது.

ஆர்.பி. உதயகுமார் கண்டனம்


முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் பங்கேற்றோம்.  ஆனால், முருகன் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து  அவதூறாக ஒளிபரப்பப்பட்ட வீடியோவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அதிமுக தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. அதில் எந்த சமரசமும் இல்லை.  அண்ணா, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.   மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ பற்றி எங்களுக்கு தெரியாது.

நாங்கள் மேடையின் பின்புறத்தில் அமர்ந்திருந்தால் நாங்கள் பார்க்கவில்லை.  மேடை நாகரீகம் கருதி  அப்போது அமைதியாக இருந்தோம். எனவே முருகன் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்” என்று கூறினார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இதுபோன்ற ஒரு வீடியோவை ஒளிபரப்பியிருக்கக் கூடாது. உயிருடன் இல்லாத அரசியல் தலைவர்களை விமர்சிப்பது தேவையற்றது” என்று கூறினார்.